மாத்தறை துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று(21) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ஒரு வர்த்தகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *