கென் கருணாஸ் நடிக்கும் ‘யூத் ‘ படத்தின் பாடல் வெளியீடு!

நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யூத்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பறந்தேனே பெண்ணே’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கென் கருணாஸ் மற்றும் அவரது குழு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யூத்’ எனும் திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பறந்தேனே பெண்ணே உன்னாலே.. புது காதல் கொண்டேனே உம்மேல..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் எழுத பின்னணி பாடகர் கென் கருணாஸ் மற்றும் பின்னணி பாடகி சோனி டாஃபோடில் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெலோடியான மெட்டு – வசீகரமான குரல்கள் – இளமை ததும்பும் வண்ணமயமான துண்டொலி காட்சிகள் – ஆகியவை ரசிக்கும் படி இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *