செம்மண்னோடை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டாம் கட்டமாக ‘கோப்ரா’ மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்போது உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, புனித ரமழான் மாதம் என்பதால் தொழுகைக்கு வருபவர்களின் நன்மை கருதி சபா பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காகவும், இருள் சூழ்ந்த வீதிகளை ஒளியூட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கை பிரதேச சபை உறுப்பினர் கபூரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, நீண்டகாலமாக இருள் சூழ்ந்து போயிருந்த கறுவாக்கேணி எல்லை வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளியூட்டப்பட்டுள்ளன.
செம்மண்னோடை உள்ளிட்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, வெறும் இரண்டாம் கட்டத்துடன் நின்றுவிடாமல், எதிர்வரும் காலங்களில் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு அனைத்து இருள் சூழ்ந்த பகுதிகளும் முழுமையாக ஒளியூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

