சட்டவிரோத சொத்துகள் இனி அரசுடைமையாக்கம்!

சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20) வெளிப்படுத்தினார்.

இந்தச் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கனே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *