மைத்ரி விக்ரமசிங்க CID முன்னிலையில் ஆஜராக அவகாசம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியுமான முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க இரண்டு வார அவகாசம் கோரியுள்ளார்.
உடல்நலக் காரணங்களால் இந்த அவகாசம் கோரப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.
இன்று CID முன்னிலையில் ஆஜராகுமாறு பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனிப்பட்ட பயணமாக ஐக்கிய இராச்சியத்துக்கு (UK) மேற்கொண்ட பயணத்திற்காக அரச நிதியில் இருந்து ரூ. 16.6 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெற தீர்மானித்துள்ளதாக CID, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *