‘மை லார்ட்’ படக் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பு!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்கிய ‘மை லார்ட்’ எனும் திரைப்படம் பட மாளிகையில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியானது. இப்படத்திற்கு திரை ஆர்வலர்கள்-  விமர்சகர்கள் – ரசிகர்கள் என பலரும் இன்றைய சமூகத்திற்கு தேவையான படைப்பு என பாராட்டினர். இதனால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்காக சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிகழ்வின் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், ” இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை எழுதி இயக்கி திரைக்கு கொண்டு வருவதை விட அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்வதற்கான பணிகள் அதிகரித்திருக்கிறது. எமக்கு இது புதிது.  படம் வெளியான பிறகு ரசிகர்களை திரையரங்கத்திற்கு சென்று சந்தித்து உரையாடியதும் உற்சாகமாக இருந்தது. படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடரவேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *