யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படத்தின் முதல் பார்வை!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கெணத்த காணோம்’ எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகும் ‘கெணத்த காணோம் ‘எனும் திரைப்படத்தில் யோகி பாபு, டொக்டர் ரேச்சல் ரெபக்கா, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஆர். பி. டாக்கீஸ் & பொக்ஸ் ஓபிஸ் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதை ஜியோ ஹாட் ஸ்டார் வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *