தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த்= கிஷோர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்டர்-18 ‘என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில் உருவாகும் ‘அன்டர் -18’ எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். தண்டனை பெற்ற வளரிளம் பருவத்தை சார்ந்தவர்களை சீர்திருத்தும் கூர் நோக்கு இல்லத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டைட்டில் லுக்கில் விவரிக்கப்பட்டிருக்கும் பின்னணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

