மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்  நன்கொடையுடன் அழகுபடுத்தும் திட்டம்!

பிராந்தியத்தின் முன்னோடிப் பள்ளியாக மாற்றும் இலக்குபிராந்தியத்தின் முன்னோடிப் பள்ளியாக மாற்றும் இலக்கு!

 

சாய்ந்தமருது – மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலை முழுமையாக அழகுபடுத்தி, ஆன்மீக அமைதி நிறைந்த சூழலில் இபாதத் செய்யக்கூடிய சிறந்த வழிபாட்டு மையமாக மாற்றும் நோக்குடன், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம், பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் உலமாசபை இணைந்து முன்னெடுத்துள்ள விசேட அழகுபடுத்தும் திட்டத்திற்காக, ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை முன்னிட்டு இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் கூட்டமானது பள்ளிவாசல் தலைவரும், பைத்துஸ் சகாத் நிதியத்தின் தலைவரும் மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *