திருகோணமலை “பிரகடனத்தை வாசிக்கும் பொதுக்கூட்டம்”

ஈழத் தமிழர் உரிமைகள் பெறுமன்றம் (ETRA) ஏற்பாடு செய்யும் திருகோணமலைப் பிரகடனத்தை வாசிக்கும் பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் 22 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கல்லடி, கிரீன் கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

“ஊர் திரள்வோம் உலகிற்கு சொல்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், தமிழர் உரிமைகள், அரசியல் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் மற்றும் சமூக சவால்களின் பின்னணியில், தமிழர் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *