எதிர்வரும் 06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்கெடுப்பு நிலையத்தில் கடமையாற்றவுள்ள சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கானதும் வாக்கெண்ணும் அலுவலர்களுக்குமான கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(28) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் கடமையாற்றவுள்ள சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களே வாக்கெண்ணும் அலுவலர்களாகவும் கடமையாற்றவுள்ளார்கள்.
இவர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் வே.சிவராஜா விளக்கமளித்தார்.
இக் கலந்துரையாடலில் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்கள் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


