அதர்வாவின் ‘வலை’ பட டீசர் பாராட்டுகளை குவித்த வண்ணம் உள்ளது!

தமிழ் திரையுலகில் சர்வதேச அளவிற்கான வணிக சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான அதர்வா இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பில் தோன்றும் ‘வலை’ எனும் திரைப்படத்தின் டீசர்- இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஏராளமான பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலை’ எனும் திரைப்படத்தில் அதர்வா, ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி ஷர்மா, ‘ஆடுகளம்’ நரேன், ஜெயப்பிரகாஷ், அர்ஜெய், அருள் டி சங்கர், துளசி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் கொமர்சல் என்டர்டெய்னராக உருவாகும் இந்த திரைப்படத்தை ராது இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பெப்சி வி .எஸ். பாலமுரளி தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் குட்டி- சாரா எனும் இரண்டு வேடத்தில் அதர்வா தோன்றுவதும்… கடல் சார்ந்த வாழ்வாதாரத்தைக்கொண்டிருக்கும் மீனவர்களின் வாழ்வியலை விவரிப்பது போல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் ‘வலை’ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *