‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தேசிய விருதைப் பெற்ற இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக துள்ளலுடன் நடித்திருக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடினே இருப்பேன்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான் , பிரார்த்தனா, அதிர்ச்சி அருண் , மதுரை முத்து , ரசூல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார் . இளம் தலைமுறை காதலர்களின் வாழ்வியலை மையப்படுத்தி ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயவரதன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் நிலையில்… இப்படத்தில் இடம்பெறும் ‘ஆடினே இருப்பேன்..’ என தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் கானா வினோத் எழுதி, பாடியிருக்கிறார். விருந்து மற்றும் சுப நிகழ்வுகளில் பங்கு மற்றும் இளைய தலைமுறையினர் உற்சாக நடனத்துடன் கொண்டாடும் வகையில் பாடல் துள்ளலிசை பாணியில் அமைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *