“அபேதம்” சமாதான கண்காட்சி- 2026

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக சமூகத்தினரின் வாழ்வியல், கலாசாரம் மற்றும் சமூக உணர்வுகளை பிரதிபலிக்கும் “அபேதம்” எனும் சமாதான கண்காட்சி 2026, கல்முனை கிறிஸ்த இல்லத்தில் இக்கண்காட்சி  இன்று (18) புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்பட்டது.

சமாதானம், சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சமூகங்களின் பண்பாட்டு அடையாளங்கள், வாழ்க்கை முறை, கலை மற்றும் சமூக அனுபவங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

“சமாதானம் பேசும் தூரமாக நீங்கள் மாறுங்கள் – உங்கள் வருகை மாற்றத்தின் தொடக்கம்” என்ற தொனிப்பொருளுடன் நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனைத்து சமூகத்தினரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு அம்சங்களும் நிகழ்வில் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *