வடக்கு , கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களில்“உட்படுத்தலை நோக்கி முன்னேறுதல்” என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைக் கல்விக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதி விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர நாட்காலிகள் மற்றும் செவிப்புல இயந்திரங்கள் (கேட்கும் கருவிகள்) மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புகலிடம் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்திரு. சாமுவேல் சுபேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜேஎஸ். அருள்ராஜ் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் மற்றும் மாவட்ட சமுகசேவைகள் திணைக்களம், வலயக் கல்விஅலுவலகம் , மாற்று திறனாளிகளின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதைப் படத்தில் காணலாம். கே.என்.எச் பி.எம்.இஸட். (KNH-BMZ) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் “புகலிடம்” என்ற நிறுவனத்தினால் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.


