வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர் கைது!

மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17)  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓலைத்தொடுவாய்  பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ கிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்று, மற்றும்  சந்தேக நபரை  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *