எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும் எம்மிடத்தில் செல்வம் இருந்தால்.. அந்த பிரச்சனையை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். ஆனால் செல்வ நிலையில் பற்றாகுறையோ போதாமையோ இருந்தால் வாழ்க்கையையே அரைக்குறையான நம்பிக்கையுடன் தான் முகங்கொடுப்போம்.
இத்தகைய தருணங்களில் யாரேனும் செல்வ செழிப்புடன் எம்மை கடந்து சென்றால்.. எம்முள் இருக்கும் பொறாமை எனும் அசுரன் எட்டிப் பார்க்கத்தான் செய்வார்.
இதை தவிர்க்க முடியாது. இந்நிலையில் நாமும் எமக்கான தன வரவை ஏற்படுத்திக் கொள்வதுடன் அதனை சேமிப்பாக தங்க வைத்துக் கொள்வதற்கான சூட்சம மிக்க குறிப்பை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தன வரவை பொறுத்தவரை குரு பகவான் மற்றும் மகாலட்சுமியின் அம்சங்கள் தான் பலனளிக்கும் என்பது உறுதி. இதனால் குரு அம்சம் கொண்ட அதாவது உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் குருவாக மதிப்பவர்களை… பாடசாலையில் கல்வி கற்பித்த ஆசிரியர்.. சிக்கல்களை எதிர்கொண்ட போது உரிய வழிகாட்டுதல்களை வழங்கிய சோதிடர்… ஆலயத்தில் இறைத் தொண்டு செய்யும் அர்ச்சகர்… ஆகியோர்களை குரு என குறிப்பிடலாம்.
மகாலட்சுமியின் நட்சத்திரம் என்பது அனுஷம் என்பதாலும், அனுஷம் என்பது ஒவ்வொரு மனிதருடைய பாதத்தை குறிப்பிடுவதாலும், குருவின் பாதத்தை பணியும் போது அதாவது ஆசிரியர் – ஜோதிடர் – அர்ச்சகர் – ஆகியோரின் பாதங்களை வெள்ளிக்கிழமைகளில் அல்லது உங்களுடைய தன வரவுக்கான நாள்களில் பாத பூஜை செய்தால்… பாத பூஜை செய்வதை தொடர்ந்தால்… உங்களிடத்தில் செல்வம் சேருவதுடன் தன வரவு தங்கு தடை இன்றி வருகை தரும். இந்த எளிய குறிப்பை நம்பிக்கையுடன் பின்பற்றினால் செல்வ நிலையில் மேம்படலாம்.

