கிளிநொச்சியில் கிராமிய வீதிகள் காபெட் வீதிகளாக புனரமைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் விமல் ரட்நாயக்கவின்  மேலதிக நிதி ஒதுக்கீட்டில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 200 மில்லியன் நிதி கிடைக்கப்பெற்றது குறித்த நிதியினை கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் மத்திய அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமிய வீதிகள் காபெட் வீதிகளாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குறித்த வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயம் செல்லும் பிரதான வீதி குண்டும் குழியுமாக பல வருட காலமாக நிரந்தர புனரமைப்பின்றி காணப்பட்ட வீதி தற்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 61 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. குறித்த வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

பல வருட காலமாக இவ்விதி நிரந்தர புனரமைப்பின்றி போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும், வைத்தியசாலை செல்வதாயின் சரி மற்றும் விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அவசர தேவை கருதி வீதியூடாக செல்வ வேண்டிய நிலை காணப்பட்டது .வாடகை வாகனங்களில் செல்வோர் அதிகலவான நிதியை செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எமக்கு நிரந்தரமான பாதுகாப்பான வீதி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது குறித்த வீதியைப் பெற்றுத் தந்த ஜனாதிபதிக்கும் மற்றும் குறித்த வீதியில் பெற்று தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *