நாளை அபூர்வ வளைய சூரிய கிரகணம்!

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நாளை (17) நிகழவுள்ளது.

இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்தச் சூரிய கிரகணத்தின் பாதையானது பிரதானமாக அண்டார்டிகா மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகளைக் கடந்து செல்வதால், இதனை இந்தியாவில் காண முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானியல் ஆய்வாளர்கள்

இந்திய நேரப்படி (IST), நாளை மதியம் சுமார் 3:26 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், இரவு 7:57 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இதன் உச்சக்கட்ட நிகழ்வு மதியம் 12:12 (UTC) மணியளவில் நிகழும்.

அண்டார்டிகாவில் முழுமையாகத் தெரியும் இந்த கிரகணத்தை, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, தான்சானியா, நமீபியா மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பகுதி நேரக் கிரகணமாகக் காண முடியும்.

ஜோதிட வல்லுநர்கள்

சந்திரன் பூமிக்கு வெகு தொலைவிலிருந்து சூரியனை மறைக்கும்போது, சூரியனின் விளிம்புகள் மட்டும் பிரகாசமான மோதிரம் அல்லது நெருப்பு வளையம் போலக் காட்சியளிப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

ஜோதிட ரீதியாக, இந்தக் கிரகணம் கும்ப ராசியில், அவிட்டம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

இது ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையாகக் கருதப்படுவதால், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமென ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *