நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று  (16) அறிவித்துள்ளது.

அக்குரேகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (16) நீதிமன்ற கடமைகளில் இருந்து விலகுவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளமையே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரக்பியை ஊக்குவிப்பதாக தெரிவித்து இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *