ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *