யாழ் பொற்பதி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி

யாழ் வடமராட்சி கிழக்கு பொற்பதி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் சிவராசா குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான ரஜீபன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக சிறிராமசந்திரன், மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் மனற்காட்டு பங்கு தந்தை அருட்தந்தை ஜோன் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் கௌரவ விருந்தினராக சிவசம்பு தர்மரத்தினமம் கலந்து கொண்டார்.
பாடசாலை மட்ட விளையாட்டுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசிகள், சான்றிதழ்களையும் மற்றும் கருந்துரைகளையும் நிகழ்வின் விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *