சமூக மேம்பாட்டு சபையின் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு!

வறுமை ஒழிப்பு “பிரஜா சக்தி” அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் முன்னெடுத்தல் போன்ற கிராமத்தின் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களிலும் அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு (சிங்கள மொழி /தமிழ் மொழி) அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்திலும், தமிழ் மொழியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்திலும் (12) நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே மற்றும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா, பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள ரத்நாயக்க, பிரியந்த விஜேரத்ன, முத்து ரத்வத்தே, அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாரை மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 503 கிராம சேவைப் பிரிவுகளின் செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இணைந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *