இயற்கை விவசாய அறுவடை பெருவிழா!

சேதனைப் பசளை மூலம் உற்பத்தி செய்த இயற்கை விவசாயம், பாரம்பரிய முறையிலான  அறுவடை நிகழ்வு நேற்று(12) திருக்கோவில் கஞ்சிகுடியாறு கிராமத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது அம்பாறை மாவட்ட மக்கள் திட்ட வரைவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வினை சூழலியல் விவசாயத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட முன்னோடி விவசாயியான மதியரசி தலைமைதாங்கி நடத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண இணைப்பாளர் அரவிந்தன், மாகாண தலைவர் இராசலிங்கம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் திட்ட வரைவு ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *