இலங்கைக் கலைத்துறையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள “திமிரழகா” வீடியோ பாடலின் முதல் பார்வை பதாதை (First Look Poster) வெளியீட்டு வைபவம் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
கண்ணகி கலாலயம் மற்றும் தேசிய கலை அரண் கலைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், பிரபல ‘Black Night’ இசைக்குழுவின் ஸ்தாபகருமான G.I. சார்ல்ஸ் பிரதீப் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் கண்ணகி கலாலயத்தின் முக்கிய உறுப்பினர்களான தலைவர் A. K. இளங்கோ, உப தலைவர் A. சுரேஷ் குமார், உப செயலாளர் வினோதினி சுரேஷ்குமார், பொருளாளர் M. F. M நசார், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா ரியாஸ் மற்றும் சமூக சேவையாளர் கலியபெருமாள் ஜெயந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், H.P. அசினி இமதி பத்திரன மற்றும் சகோதர மொழி இளம் பாடகர் G. I. துசித்த ரய்யான் ஆகியோர் இணைந்து முதல் பார்வை பதாதையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.
இலங்கை மண்ணின் மூத்த கலைஞரான ஜெறாட் நோயல் மற்றும் தேவயானி ஆகியோரின் நேர்த்தியான நடிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது. AVT Production தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரையாக்கத்தின் பின்னணியில் திறமையான பல கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்:
இயக்கம்: லவ்லி வினோத் (Lovely Vinoth)
இசை: வெற்றி சிந்துஜன்
பாடகர்கள்: திலக்ஷன் & டிலாணி
வரிகள்: வெற்றி துஷியந்தன்
ஒளிப்பதிவு: KVM விதுசன்
படத்தொகுப்பு: சிந்துஜன் VFX
ஒப்பனை: கிரிஜாஜினி
நிகழ்வில் உதவி இயக்குனர் ரகீதன், கலை இயக்குனர் டேரியன், தயாரிப்பு நிர்வாகி பிரியங்கன் மற்றும் போஸ்டர் வடிவமைப்பாளர் ராஜீவன் தயாபரன் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Avt Production & Vk Brothers இணைந்து தயாரித்துள்ள இப்பாடல் மிக விரைவில் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை சென்றடையவுள்ளது.
இலங்கைகலைஞர்களின் இத்தகைய கூட்டு முயற்சிக்கு கலை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

