தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் தொழிலை தெய்வமாக மதித்து அறம் சார்ந்த முறையில் லாபத்தை ஈட்டி அதன் ஊடாக தங்களது வாழ்வாதாரத்தையும், வாழ்வியலையும் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள். இவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் திட்டமிட்ட அளவில் சீராக மேம்படும். இதற்காக இவர்கள் பாவிக்கும் தொழில் கடந்த ரகசிய சூத்திரம் என்ன? என்பதை … மற்றவர்களும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பின்வருமாறு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் நாளாந்தம் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு மேல் ஆறு மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி , வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து எங்களுடைய நாளாந்த தேவைகள் குறித்த எதிர்பார்ப்புகளை எம்முடைய இஷ்ட தெய்வத்தை வணங்கியபடி 108 முறை ஒருமுகமான மனதுடன் உச்சரித்து தியானிப்போம்.
இஷ்ட தெய்வத்தை வணங்குவதற்கு முன் உதாரணத்திற்கு ‘ஓம் நமச்சிவாய’ – ‘ஓம் நமோ நாராயணாய’, ‘ஓம் முருகப் பெருமானே’ என்ற ஏதேனும் ஒரு மந்திரத்தை உச்சரிப்போம். அத்துடன் ஒவ்வொரு மந்திரத்தின் இறுதியிலும் ‘நம ‘ என்ற வலிமை மிக்க சொல்லுடன் பாவிப்போம். அதாவது ‘ஓம் நமச்சிவாய நம’, ‘ஓம் நமோ நாராயணாய நம’, ‘ஓம் முருகப் பெருமானே நம’ என ஒவ்வொரு முறையும் ‘நம ‘எனும் வார்த்தையை இணைத்து 108 முறை தொடர்ந்து உச்சரிப்போம். எங்களில் பலருக்கும் 48 நாட்களில் இருந்து 90 நாட்களுக்குள் மாற்றமும், ஏற்றமும் நிகழ்ந்தது இதனை நீங்களும் பாவித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

