அமரகீர்த்தி அத்துகோரல படுகொலையில் 12 பேருக்கு மரண தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை வழக்கின் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது, நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் மோதலைத் தொடர்ந்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இதன்படி, இன்றைய வழக்கு விசாரணையின் போது, 37 பேரில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *