இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இரு அதிகாரிகள் கைது!

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ரூபா 50000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

நேற்று(10) மாலை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும் பின்னர் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நிறைவு செய்ததன் பின்னர் இன்று(11) நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகாக ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *