96 ஏக்கர் நிலப்பரப்பில் மஹியங்கனை வர்த்தக நகரம் உருவாக்கம்!

மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 96 ஏக்கர் காணியை கைத்தொழில் மற்றும் வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்வதற்கும், அந்தப் பகுதியின் பொருளாதாரத்திற்கு தீவிரமாக பங்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நேற்று (10) தொழிற்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட வசேட கண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *