மீனவர்களின் சத்யாகிரகப் போராட்டத்தால் மீன்களின் விலை அதிகரிப்பு!

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

தேவேளை, சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாகவும்
இதன் விளைவாக மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாகவும் மீன் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கமைய, நேற்று (10) பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் 3,600 ரூபாவுக்கும் பாறை மீன் 3,000 ரூபாவுக்கும் கெலவல்லா மீன் 2,700 ரூபாவுக்கும் பலயா மீன் 2,000 ரூபாவுக்கும் மற்றும் லின்னா மீன் 900 ரூபாவுக்கும் மற்றும் சாளையா மீன் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களின் இந்தப் போராட்டம் மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *