கிளிநொச்சியில் வெடிகுண்டு மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியின் பனங்கண்டி பகுதி செல்லும் பிரதான வீதியியை அண்மித்த பகுதியில்அன்மையில் பெய்த மழை காரணமாக மண்ணில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு ஒன்றும் மற்றும் மோட்டார் செல் ஒன்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த அப்பகுதியில் இனம் காணப்பட்டுள்ள வெடி பொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *