கராத்தே துறையில் சாதனை ஜப்பான் கராத்தே தோ ஷோடோகன் படிப்பு சங்கத்தால், கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை நடாத்தப்பட்டது.
இந்தத் தரப்படுத்துதல் பரீட்சை, ஜப்பான் கராத்தே தோ ஷோடோகன் படிப்பு சங்கத்தின் தலைமை போதனா ஆசிரியரான சிஹான் எச். எம். விஜய குமார தலைமையில் நடைபெற்றது.
இப் பரீட்சையில் பயிற்றுவிப்பாளர்களான சென்செய் எம். நாகராஜா, சென்செய் டி. சதானந்த குமார், சென்செய் ஏ.ஆர். நவாஸ் மற்றும் சென்செய் எஸ். சகாயராஜா ஆகியோரின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சென்செய் டி. சதானந்த குமார் (ரங்கன் மாஸ்டர்)இன் மாணவர்களான, மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் யு.கேசோபன் மற்றும் எஸ்.நோயல் ரிதுஷன் ஆகிய இருவரும்
கருப்பு பெல்ட் (முதல் டான்)பெறுவதில் சிறப்பு சித்தி பெற்றனர்.
இவர்களுக்கான கருப்பு பெல்ட் அணிவிக்கும் கௌரவ நிகழ்வு இன்று(09) ஜப்பான் கராத்தே டோ ஷோடோகன் சங்கத்தின் தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும், தெற்காசியாவுக்கான பரீட்சகருமான சிஹான் எச். எம். விஜய குமாரவால் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

