சுதந்திரதினத்தை முன்னிட்டு சிரமதான பணி!

பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று(08) பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்திவரையும், ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து வராத்துப்பளை சந்திவரையும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும்பணி முன்னெடுக்கபட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதானப் பணியில் பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொலிஸார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன், சபை உப தவிசாளர் காந்தரூபன், சபை செயலாளர், மற்றும் சபை உத்தியோகத்தர்கள் ரமேஸ்வரன் உட்பட பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை பருத்தித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை பிரதேச சபையின் 6 ம் வட்டாரமான புலோலி, புற்றளை இளைஞர் கழக மைதானத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் மரம் நடுக்கையும் இடம்பெற்றது.

இதிலும் பருத்தித்துறை போலிஸார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன், சபை செயலாளர் ரமேஸ்வரன், கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *