சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இயந்திரங்கள் பறிமுதல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு நேற்று(07) இரவு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் உழவு இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கல்லாறு பகுதி தற்பொழுது மணல் அகழ்வுக்கு முற்றாக தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அப்பகுதி வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் காணப்படுவதன் காரணமாக அப்பகுதியில் இருந்து மணல் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட்டிருந்த போதிலும் சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தடய பொருட்கள் 11ஆம் திகதி அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *