கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

உடவளவை தேசிய பூங்காவின் கோமகல, ஹம்பேகமுவ பகுதியில் நேற்று  (07) உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 582 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 47 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், கட்டுவன மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று  (08) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *