மதுவரி வருமானத்தை அதிகரிக்க திட்டம்!

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்தது.

அதற்காகத் தேவையான டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறை, புதிய சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக வினைத்திறனை மேம்படுத்தல், மனித வள அபிவிருத்தி மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *