10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (07) ஆரம்பமாகிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தப் பெருந்தொடரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்துகின்றன.
இந்தத் தொடரில், தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தப் பெருந்தொடரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்துகின்றன.
இந்தத் தொடரில், தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
= ஏ பிரிவு
இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா
=பி பிரிவு
இலங்கை, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், சிம்பாப்வே
=சி பிரிவு
இங்கிலாந்து, இத்தாலி, நேபாள், ஸ்கொட்லாந்து, மேற்கிந்திய தீவுகள்
=டி பிரிவு
ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம்
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
அதன் பின்னர், சூப்பர் 8 சுற்றிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
லீக், சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உட்பட, மொத்தம் 55 போட்டிகள் இந்தத் தொடரில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகள்,
இலங்கையில் – கொழும்பு எஸ்.எஸ்.சி, ஆர்.பிரேமதாச, கண்டி பல்லேகல
இந்தியாவில் – கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை (வாங்கடே)
ஆகிய மைதானங்களில் நடத்தப்படுகின்றன.
இன்றைய போட்டி விபரம்
காலை 11.00 மணி
பாகிஸ்தான்
நெதர்லாந்து
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம்
மாலை 03.00 மணி
ஸ்கொட்லாந்து
மேற்கிந்திய தீவுகள்
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
இரவு 07.00 மணி
இந்தியா
அமெரிக்கா
வாங்கடே மைதானம், மும்பை

