கெஹெலியவின் மகள் பிணையில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளார்.

300 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட சமித்ரி ரம்புக்வெல்ல கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *