சிறைச்சாலை அதிகாரியை கத்தியால் குத்தி கொள்ளை!

காலியில் ஹிக்கடுவை, தலாகஸ்தெனிய பிரதேசத்தில் கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (4) இரவு இடம்பெற்றுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் ஆராச்சிட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரி தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *