ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று(24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அலுவலகம் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தாவினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன், சக வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



