வாழைச்சேனை கலைவாணி கலை மன்றத்தின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாசார நிகழ்வு

தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் வருடாவருடம் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாசார நிகழ்வும் இடம் பெறுகின்றது.

 

அந்த வகையில் 2025ம் ஆண்டின் தமிழ் சிங்களப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக தலைவர் சு. சுதர்ஜன் தலமையில் வாழைச்சேனை கலைவாணி கலை மன்றத்தினால் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வும், தரம் 5 புலமைபரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் அதனோடு ஒட்டி க.பொ.த சா. தரம் மற்றும் உயர்தரத்தில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வும், அத்துடன் இந்தியா கேரளா மாநிலத்தில் இடம்பெற்ற கபடிப் போட்டியில் 1 ஆம் இடம்பெற்று மாவட்ட மண்ணிற்கு பெருமை சேர்த்த கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக் கழக கபடிப் போட்டி வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

 

இந்நினகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு. ராஜ்கீதன் கலந்து கொண்டதுடன் பல தொழிலதிபர்கள் மற்றும் சமூக சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *