சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் தொற்றா நோய்க்கான இரத்த பரிசோதனை!

தொற்றா நோய்க்கான இரத்த பரிசோதனை  நிகழ்வு சாய்ந்தமருது பிரதேசவைத்தியசா லையில் அன்மையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் அனுமதியுடன், டாக்டர் எம்.எச்.றிஸ்பினின் வழி நடாத்தலில் நடைபெற்ற இந்த பரிசோதனை நிகழ்வில் BMI, சுகர், கொலஸ்ரோல், கிட்னி மற்றும் கண் பரிசோதனை என்பன ஒழுங்கு செய்யப்பட்டு நாடத்தப்பட்டது.

அத்துடன் பாலியல் நோய் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டாக்டர் எம்.எச்.றிஸ்பின் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் டாக்டருடன் தாதிய உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் இணைந்து செயற்பட்டனர்.

இங்கு BMI, சுகர், கொலஸ்ரோல், கிட்னி மற்றும் கண் பரிசோதனை என்பன ஒழுங்கு செய்யப்பட்டு நாடத்தப்பட்டது.

அத்துடன் பாலியல் நோய் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இங்கு ஸஹ்றியன்ஸ் – 93/96 அணியினரின் அங்கத்தவர்கள், ஆண் பெண் இருபாலாரும் ஆர்வமாக கலந்து கொண்டு இரத்தத்தினை வழங்கினர்.

இங்கு கருத்து தெரிவித்த ஸஹ்றியன்ஸ் – 93/96 அமைப்பின் அங்கத்தவரும் டாக்டருமான எம்.எச்.றிஸ் பின், மக்கள் சிறந்த ஆரோக்யமான உணவு பழக்க வழக்கத்தை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் சகல நோய்கள் தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் அனைவரும் அடிக்கடி வைத்தியர்களை அனுகி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் இந்த பரிசோதனை நடந்துவதற்கு அனுமதியளித்த சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *