தேசிய மக்கள் சக்தி பௌத்தத்தை அவமதிப்பதாக கூறி திருமலையில் ஆர்ப்பாட்டம்!

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறி திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக மூன்று பேர் வீதியில் அமர்ந்து திங்கட்கிழமை(2) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுஜன அரகலய குடிமக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் சானக்க பண்டார மற்றும் சிங்கள பெளத்த ஐக்கியம் அமைப்பின் செயலாளர் லங்கா தரங்க ஆகியோரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றில்,திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானத்தை அமைத்து, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பான வழக்கு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *