எம்.பியின் வாகனம் மோதியதில் இருவர் காயம்!

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கொடிகாமம்  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் வேனின் சாரதி கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கு சியாமளா சந்தி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வேனில் பயணித்தபோது சனிக்கிழமை (31) அன்று விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *