பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்படுகிறார் என எப்.பி.ஐ (FBI) அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பகமான மனித மூலமொன்றை மேற்கோள்காட்டி தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், ட்ரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர், ட்ரம்பின் தனிப்பட்ட வர்த்தக நிறுவனம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய செயற்பாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
குஷ்னரின் குடும்பம் ஊழல் மற்றும் ரஷ்ய நிதிப் பரிமாற்றங்களுடன் தொடர்புடையது என அந்த ஆவணத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதிதீவிர சியோனிச அமைப்பான ‘சாபாத்’ (Chabad) வலையமைப்புடன் குஷ்னர் குடும்பத்திற்குத் தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீனின் சட்டத்தரணி எலன் டெர்ஷோவிட்ஸ், இஸ்ரேலிய உளவு அமைப்பான ‘மொசாட்’ (Mossad) இனால் உயர்மட்ட மாணவர்களைக் கையாள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டார் என்ற தகவலும் இதில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குஷ்னரின் தந்தை நிதி மோசடி வழக்குகளில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர் என்பதும், ஜனாதிபதியாக இருந்தபோது ட்ரம்ப் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருந்தமையும் எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இந்த புதிய குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

