உரகஸ்மங்ஹந்திய – தெல்கடை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்று பெரும் துயரமாக முடிந்துள்ளது.
தொலைபேசி ஒன்று தொடர்பில் தந்தை–மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், தந்தை கூர்மையான ஆயுதமான மன்னாவால் தனது 14 வயது மகளை தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமியின் சடலம் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

