கண்டி – ஹதரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவி, பேருந்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக வகுப்பில் கலந்துகொண்டு பேருந்தில் வீடு திரும்பிய வேளையில்,
பேருந்திலிருந்து இறங்க முயன்ற போது அவர் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த நிலையில்,
கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

