உலக சந்தையில் மீண்டும் சரிந்த தங்க மற்றும் வெள்ளி விலைகள்!

உலக சந்தையில் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன், இது நேற்றுடன் ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும்.

வெள்ளி விலைகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன், இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 29.16 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையிலிருந்து சுமார் 15 டிரில்லியன் டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகளவில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்ததால், உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இதன்படி, இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண்  380,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண்  349,600 ரூபாவாகவும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *