கிண்ணியாவில் கோர விபத்து!

இன்று(30) அதிகாலை 12 மணியளவில் கிண்ணியா சம்பத் வங்கிக்கு முன்னால் வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக கிண்ணியா நகர வீதிகளில் மாடுகளின் நடமாட்டம் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது. நகர சபை தவிசாளர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், உரிமையாளர்கள் காட்டும் அலட்சியமே இவ்வாறான விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிறது.

விபத்தில் சிக்கிய இளைஞர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்துக்குள்ளான மாட்டின் கால் முறிவடைந்து,மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *