மருதங்கேணி பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவெடிக்கை!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச் சந்தையின் சுற்றுச்சூழல் முழுவதும், புற்கள், பற்றைகள் மற்றும் மிருக எச்சங்கள் சூழ்ந்து காணப்பட்டதால் மருதங்கேணி பொதுச்சந்தைக்கு வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

அது மட்டுமல்லாமல் பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளும் தமது அன்றாட வியாபார நடவடிக்கையில் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு முகம்கொடுத்து வந்தனையடுத்து, வடமராட்சி கிழக்கு மக்கள் மற்றும் வியாபாரிகள் இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷி டம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, உடனடியாக தவிசாளரின் உத்தரவின் படி மருதங்கேணி பொதுச் சந்தை வளாகம் முழுவதும் இன்று காலை பருத்தித்துறை பிரதேச சபையால், விசேட சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *